மஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்

Home  >>  மஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்

    உ

    மஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்


 

  1. இந்த கலியுகத்தில் மக்கள் ஏழேழு ஜென்மங்களில் செய்துள்ள பாவங்களை போக்கி நலம்பெற செய்திடவே இந்த புண்ணிய பூமியில் அவதரித்தேன்.
  2. ஸ்ரீகண்டிநத்தத்தில் நானூறு ஆண்டுக்கு முன்பு காளிகாம்பாள் என்ற பெயரில் பக்தர்களை காத்து வந்த நான் தற்சமயம் நாகாத்தம்மனாய் காத்தருள் புரிந்து வருகிறேன்
  3. வரும்போதே நல்லா சொல்வாங்களா? கூப்பிட்டு சொல்வாங்களா? எப்படி சொல்வாங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தியே உன் பிரச்சனையை நான் தீர்க்கிறேன்.
  4. ஏம்மா என்னை இப்படி சோதிக்கிற? நான் என்ன பாவம் செஞ்சே? ஏன் இப்படி அவதிபடுகிறேன்? என்னை நீ தாம்மா காப்பாத்தனும் என்று வந்தியே, கவலைப்ப்டாதே நான் காப்பாத்தறேன்.
  5. எனக்கு வம்சத்தை கொடும்மா, வாரிசை கொடும்மா, அக்கம்பக்கம் பேசறத என்னால் தாங்க முடியல என்று அழுதுபுலம்பி வந்திருக்க. கவலைப்படாதே நான் உனக்கு அமைச்சிதாரேன்.
  6. என் புள்ளைக்கு நல்ல புத்திய கொடும்மா, படிப்பை கொடும்மா, காப்பாத்தி கொடும்மான்னு அழுதுபுலம்பி வந்திருக்க கவலைப்படாதே நான் அமைச்சி தாரேன் போ?
  7. நான் கொடுத்த அம்சத்தை நான் காப்பாத்தி தாரேன் கவலைபடாதே.
  8. புது முயற்சிகள் அனுகூலமாகும் தொடங்கலாம்.
  9. நீ இருக்கும் இடம் சரியில்லை, மாற்றிக்கொள்.
  10. மண்ணுக்கும் வினையில்லை மக்களுக்கும் கேடியில்லை, கிரக நிலைதான் சரியில்லாம கஷ்டப்படுத்தது அதை நான் சரி பண்ணிதாரேன்.
  11. உன் வீட்டிற்கு வந்து படமெடுத்து ஆடியதே நான்தான் உனக்கு நல்லது செய்ய, நான்தான் உன்ன இங்கு வரவழைச்சேன்.
  12. மூன்று பச்சிலை சாறு உள்ளுக்கு கொடுக்க உன் பிரச்சனை தீரும்.
  13. முழு மனசோட நீ செய்த பரிகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது சுபமேஅனுகூலமாகும் சுபம்.
  14. நான் நடத்தி தருகிறேன் நீ ஏன் கவலைப்படறே போ.
  15. மேற்கு பார்த்த சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனைகள் செய்து ஆலயத்திற்கு வா.
  16. நவக்கிரகத்தில் புதனுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வா.
  17. உனக்கு கர்மம் நடக்கிற காலம் வந்துவிட்டதே, இருள் ௲ழ்ந்து விட்டதே, என்னை காப்பாற்றி கொடும்மான்னு வந்திருக்க.
  18. தடையை கழட்டுடா, தடையை கொழுத்துடா, தடையை எடுடா, தடையை எடுத்து கொண்டுஅனைவரின் தலையை சுற்றி கடலில் விட்டு தலை முழுகி வா.
  19. என்னை மீறி மருத்துவம் பாக்கிறியே, மருந்து மாத்திரை சாப்பிடுறியே குணமடையுதா? தவிர்த்துவிடு, அனைத்தையும் நான் பாத்துக்கிறேன்.
  20. புத்தியை கொடுக்கனும், அமைதியைக்கொடுக்கனும், அனுகூலமாக்கனும் என்று வந்திருக்கிறீயே.  நான் உனக்கு தரேன்.
  21. பருவத்திற்கு வந்திருந்து இரண்டுபேறும் சேர்ந்து பச்சிலைச்சாறு பருகி என்னை வணங்கி சென்றாள் உனக்கு வம்சத்தை கொடுத்து காப்பேன்.
  22. வேலைக்கு போகமல் காசு கேட்டால் கிடைக்காது.
  23. நினைத்தது கிடைக்கனும் என்று ஏங்கி வந்திருக்க அதுவே அமைச்சி தாரேன்.
  24. நம்பிக்கையோடு துணிஞ்சி இறங்கி இருக்க சுபமே நடக்கும்.
  25. ஆவேசம் வேண்டாம், கோபம் வேண்டாம் பொறுமையே அற்புதமாக்கும், அனுகூலமாகும்.
  26. விதைச்ச அன்னைக்கே அறுவடை செய்யமுடியாது, பொறுமையே வெற்றியைக்கொடுக்கும்.
  27. பரிகாரத்தை காலத்தோடு செய்தால்தான் பலன் கிடைக்கும், உனக்கு நேரம் கிடைக்கையில் செய்தால் பலன் இல்லை.
  28. சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் பெண்களால் ஏற்பட்ட சாபம் போகும்.  பெண்ணால் ஏற்பட்ட சாபம் தீர்ந்தால்தான் பலன் கிடைக்கும்.
  29. முடிவோட பாகங்கள் அடுத்த வாரத்தில் சொல்கிறேன்.
  30. பட்டகஷ்டத்தோடு அடுத்துவர பல கஷ்டத்தை அனுபவித்துதான் ஆகனும்.
  31. எங்கபோய் பார்த்தாலும் நடக்கவில்லை, பலன் இல்லை எம்பிள்ளைக்கு வம்சத்தை கொடு, வேலையைக்கொடு, பாவ வினைகளிலிருந்து தீர்வை கொடு என்று என்னை நாடி வந்திருக்க போ நான் அமைச்சி தரேன்.
  32. பதிமூன்று தினங்கள் கடுமையான கண்டம் நான் கொடுக்கும் முழுக்கனியை உன்கூட எப்போது வைத்திரு.
  33. இருக்க இடம் கொடு, தொழில் அமைத்துக்கொடு சீக்கு, பினி, பீடைகளிலிருந்து விடுதலை கிடைக்கனும் என்று வந்திருக்க நான் அமைச்சி தரேன்.
  34. சிறுக சிறுக பெருகும் நேரம் வந்துவிட்டது அதனை நான் பாத்துக்குவேன்.
  35. என் தோஷத்தை வைத்துக்கொண்டு முயற்சித்தால் நன்மைக்கு வராது.  தோஷத்திற்கு பரிகாரம் செய் பலன் தருகிறேன்.
  36. ஓம் என்றாலும், ஓம் சக்தி என்றாலும், மஹாசக்தி என்றாலும் எல்லாம் ஒன்றுதான், அனைத்திலும் நானே, பிரிவு இல்லை, பேதம் இல்லை.
  37. பரிகாரம் செய்யும்போதும், தானம் செய்யும்போதும் முழுமனதுடன் உம்மால் முடிந்ததைசெய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதுதானே என்று அறை மனதுடன் செய்தால் ஏதுவும் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.