பிரம்ம மூகூர்த்த கோ பூஜை

Home  >>  பிரம்ம மூகூர்த்த கோ பூஜை

கடந்த தை மாதம் அருள்வாக்கில் அன்னை வழங்கிய அருள்வாக்கின்படி தினமும் அதிகாலை பிரம்ம மூகூர்த்த காலமான 4.30 மணி முதல் 6.00 மணிக்குற்பட்ட பொழுதில் அன்னை ஆலய நடைத்திறக்கப்பட்டு ஆலய கோ மடத்தில் பராமரிக்கப்படும் பசுக்களில் பால் சுரக்கும் பசுவிற்கு உரிய அலங்காரங்கள் செய்து அன்னையின் ஆலய முன்புறமாக நிறுத்தி அன்னை அவர்கள் கண்டு களிக்கும் விதமாக சிறப்பான கோ பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

நாம் நன்கு அறிந்தவையான அனைத்து தெய்வங்களும் பசுவின் உருவில் ஒவ்வொரு பகுதியில் வாசம் செய்வதும், அதே வேளையில் அதிகாலை பசுவை அலங்கரித்து உரிய மந்திரங்கள கூறி பூஜிக்க அனைத்து தேவர்களையும், தேவதைகளையும் ஒரே தரிசித்த பாக்கியத்தினை பெறுகிறோம் என்பதான கூற்றினை மெய்பிக்கும் விதத்தில் நடந்தேறி வருகிறது.  இவ்வறாக அன்னைக்கு அதிகாலை கோ பூஜை செய்வதால் ஏற்படும் பலன் அன்னையை தரிசிக்கும் பக்தருக்கும் அவர்தம் குடும்பத்தார்களுக்கும் கிடைக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதனையும் அறிய முடிகிறது. எனவே, அன்னையின் ஆலய கோ பூஜைகளிலும் கலந்துக்கொள்ள விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நமது கலச்சாரத்தில் பசுவை வணக்கும் வழக்கம் காலம்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.  அதன் நடைமுறைப்படிதான் புதிதாக நிர்மானிக்கும் ஆலயங்கள், புதுவீடுகளுக்கு கோ பூஜை செய்துதான் அதனை பயன்படுத்த் துவங்குகிறார்கள் என்பதனை கடைபிடிக்கும் விதமாகதான் இந்த கோ பூஜையானது நடத்தப்பட்டு வருகிறது.

எனவேதான் நமது ஸ்ரீகண்டிநத்தம்  அருள்மிகு. அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்களின் ஆலய வழிப்பாட்டிலும் மிகவும் பிரசித்திப்பெற்ற புகழ்வாய்ந்த பழமையான திருக்கோயில் நடத்தப்பட்டு வருவதுபோல் தினமும் அதிகாலை பிரம்ம மூகூர்த்தத்தில் கோ பூஜை சேர்க்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இத்துடன் சமீப காலமாக அன்னையின் அருள்வாக்கின்படி அருள்வாக்கு கிழமைகளில் தோஷ நீவர்த்தி பரிகாரங்கள் அன்றைய தின அருள்வாக்கில் முடிவில் அன்னை ஆலயத்திற்கு முன்பாக அவர்களால் வழங்கப்படும் தானங்கள் மூலமாக நடந்தேறி வருகிறது.  அதாவது திருமணதோஷம், மாங்கல்ய தோஷம், நாகதோஷம் மற்றும் புத்திரதோஷம் என்று பலவிதமான தோஷமுள்ளவர்கள் ஒன்பது எண்ணிக்கையில் கன்னியர் பூஜை, சுமங்கலி பூஜை என்ற வகையில் ஏதேனும் ஒன்றினை நிறைவடைந்தவுடன் அருள்வாக்கு அம்மா அவர்களால் ஆலயத்தின் முன் அமர்த்தி தேவையான அலங்காரங்கள் செய்து தீபராதனைக்காட்டி மங்கலப்பொருள்கள் அமர்ந்திருக்கும் கன்னியர், களையர், சுமங்கலிகள் அவர்களது ஆசீர்வாதங்களையும் அம்மாவின் அனுகிரகத்தையும் பெறும்விதமாக அச்சதைகள் தூவி அவரது தோஷம் விலகிட பிராத்தித்து நிறைவாக மாலை அணிவித்து நடத்தப்பட்டு வருகிறது.  அதில் உடன் பலனும் கிடைத்து வருகிறது.  இப்படியாக பலவிதத்தில் உடன் அற்புதங்களையும் நிகழ்த்தி சமீப காலங்களின் மஹாசக்தி நாகாத்தம்மன் பக்தர்களை காத்து வருகிறார்கள்.

கோ பூஜையில் பங்குகொள்ளும்

குடும்பங்களாக நலம் பொறுவோம்!!