பௌர்ணமி பூஜை/ ஹோமம்

Home  >>  திருவிழாக்கள்/சிறப்பு பூஜைகள்  >>  பௌர்ணமி பூஜை/ ஹோமம்

பௌர்ணமி பூஜை/ ஹோமம்

நாம் என்னதான் பூமியில் வாழ்ந்தாலும் நமது நடவடிக்கைகள், செயல்கள், வாழ்க்கை முறைகள்ள ஏன் நமது பெண்களின் உடல் இயக்கம் முழுவதும் நிலவின் தோற்றத்தையும், வளர்ந்தும் தேய்ந்தும் பூமியை குளிர்விக்கும் விதத்தில் மிகுந்த தொடர்புடன் இருந்து வருகிறது.   வளர்பிறை மற்றும் தேய்பிறை என்ற முறையில் இருந்து அமாவாசை பௌர்ணமி என்ற முழுமையான இருள் அல்லது ஒளியின் தன்மையை கொண்டே பெரும்பாலான செயல்கள் இப்பூவுலகில் தினமும் நடந்தேறி வருகிறது.  அந்த விதத்தில் அமாவாசை தினமானது நமது மூதாதையர்களை வணங்கவும், அவர்களுக்கான நீத்தார் கடன்களை நிறைவாக செய்யவும் உகந்த நாட்களாகவும், ஏன் ஒரு சில உக்கிரமான தெய்வ வழிப்பாட்டிற்கும் குறிப்பாக அங்காள பரமேஸ்வரி அம்மன், ப்ரித்தியங்கரதேவி அம்மன போன்ற தெய்வ வழிபாடுகளும் மிகவும் பிரசித்துப்பெற்றதாகும்.   இதுபோன்று சதுரகிரி போன்ற சித்தர்கள் வாழும் மலைப்பிரதேசங்களுக்கான புனித பயணம் மேற்கொள்வதற்கும் மிகவும் உகந்த தினங்களாக அமாவாசை தினம் மதிக்கப்பட்டு வருகிறது.   இதற்கு நேர் எதிராக தோன்றும் முழு நிலவு தினமான பௌர்ணமியானது தெய்வ வழிப்பாட்டிற்கு மிகவும் உகந்த் தினமாகவும், மனிதன் முக்திபெற இறைவனை வலம்வரும் திருவண்ணாமலை கிரிவலம் போன்ற மாபெரும் புனித பயணத்தை மேற்கொண்டு அவரவர் சக்தி நிலையினை உயர்த்த இடத்திற்கு சென்று அடையும் தெய்வீக தினமாகவும் திகழ்கிறது.  அப்படியாகதான் நமது பேசும் தெய்வம் கலியுக காவல் காக்கும் அன்னை ஸ்ரீகண்டிநத்தம் அருள்மிகு. அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் ஆலய பௌர்ணமி பருவமும், இங்கு பௌர்ணமி திதியை பருவம் என்ற முறையில் அன்னையின் அருள்வாக்கு பெற்று பலன்பெற்ற பக்தர்கள் அவர்களது நன்றியை தெரிவிக்கும் விதமாகவும், பஞ்ச பூத நிலையில் மிகவும் தூய்மையான அக்னியினை உருவாக்கி யாக வேள்வியினை நிகழ்த்தி அதில் அன்னையை எழுந்தருள வேண்டி வணங்கி பலன் பெறுவதோடு நோய் தீர்க்கவும், வம்சம் விளங்க வாரிசு கிடைக்க வேண்டி பச்சிலை சாறினை தம்பதி சகிதமாக பருகி பலன்பெறுவும் உகந்த நாளாக ஒவ்வொரு மாதமும் அன்னை ஆலய கருவறைக்கு எதிரில் பலிபீடமருகில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

பௌர்ணமி பருவத்தன்று மாலை ஏழு மணியளவில் அன்னையின் ஆலய பலி பீடத்திற்கருகில் யாக குண்டம் அமைத்து அதில் 108 வகை ஹோம திரவியங்கள, நெய், தேன், பலவகை பழங்கள் மணம் வீசும் பலவிதமான மலர்கள், நவதான்யங்கள், பட்டு புடவை, காசு என்று அனைத்து கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் நிதிக்கொண்டு உரிய ஏற்பாடுகள் செய்து யாக வேள்வியினை நிகழ்த்தி அன்னையை அதில் அக்னி ருபத்தில் எழுந்தருளச் செய்து புனித நீர் கலசக்குடங்களில் சக்தியினை தேக்கி அப்புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், செய்து அலங்காரம் செய்வித்து தீப வரிசைக்காட்டி புனித நீரினை பக்தர்கள் மேல் தெளித்து அன்னையின் அன்பையும், அருளையும் வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்து அருள்மிகு. அருள்வாக்கு அம்மா அவர்களால் பூ, மஞ்சள், குங்குமம் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.   திருக்கோவில் சார்பாக நோய் தீர்க்கும் பச்சிலை மருந்தும், குழந்தைபேறு வேண்டிடும் தம்பதிகள் ஒன்று சேர்ந்து மண்டியிட்டு வேண்டுதல் செய்ய மருந்து கொடுத்து இருவருக்கும் பச்சிலை சாறு ஊற்றியும் குழந்தை வரம் கிடைக்க அம்மா அவர்கள் அனைவரையும் ஆசீர்வாதிப்பார்கள.  இவ்வாறாக பௌர்ணமி பூஜையிலும், யாக வேள்வியிலும், கலந்துகொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீப வரிசை தரிசனம், பிரசாதம், பச்சிலை சாறு மற்றும் மருந்து உண்டு குழந்தைபேறு கிடைக்கப்பெற்ற தம்பதிகள் எவ்வளவோ பேர் குழந்தையுடன் வந்திருந்து அன்னைக்கு தங்களின் மகிழ்ச்சியினை  தெரிவித்து மகிழ்வுடன் செல்வது ஒரு சிறப்பான நிகழ்வாக இன்றும் தொடர்ந்து வருகிறது.  ஒவ்வொரு பௌர்ணமி பருவமும் அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் பிள்ளைபேரு வழங்கும் சிறப்பு தினமாகவே தொடர்ந்து நடந்தேறி வருகிறது என்பதனை மீண்டும் அழுத்தம் திருத்தமாக பதிப்பதிலே மட்றட்ற மகிழ்ச்சியடைகிறோம்,  இதனை படிப்போறும், படித்தவர்கள் சொல் கேட்போரும், குழந்தைபேரில்லாமல் தவிப்போரும் அன்னையின் ஆலயம் வந்திருந்து தம்பதி சகிதமாக அன்னையின் அருளைப்பெற்று குழந்தை பாக்கியத்தையும் பெற்று இப்பிறவியின் பயன் அடைய மனமார வாழ்த்துகிறோம்.

This page is available in English Language check it out !