நவராத்திரி திருவிழா

Home  >>  திருவிழாக்கள்/சிறப்பு பூஜைகள்  >>  நவராத்திரி திருவிழா

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாவில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமியை உள்ளடக்கிய கொலு வைத்து பூஜிக்கும் நவராத்திரி ஒன்பது நாட்களை உள்ளடக்கிய பத்தாவது நாள் விஜய தசமியோடு சேர்த்து பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

நவராத்திரி துவங்குங்கும் நாளுக்கு முதல் நாள் இரவே கோயில் உள்பிரகாரத்தில் ஒன்பது படிகளோடுக்கூடிய கொலு மேடை அமைத்து பலவிதமாக இறை உருவங்களின் சிற்பங்கள், இயற்கை விவசாயம், விலங்குகள், திருவிழாக்கள், திருமண வைபவங்கள், சாலை, பாலம், ஆறு, நீர் ஊற்று, சாலை விதிகள், வாகன போக்குவரத்து, வண்ண விளக்கு என்று பலவிதமான கொலு காட்சிகளை உருவகப்படுத்தும் பொம்மைகளை வைத்தும், புதிதாக அமைத்தும், தானியங்களை, விதைத்தும் உருவாக்கப்படும் அமைப்பிற்கு உற்சவர் அம்மன் அவர்களை கருவறையிலிருந்து அழைத்து முதல்படியில் மையமாக எழுந்தருள் செய்து அலங்கரித்து கொலு மண்டபமே அருளோடு திகழுமாறு அமைக்கப்படுகின்றது.

நவரத்திரியின் முதல் மூன்று நாட்கள் அன்னை அவர்கள் துர்க்‌கை அவதாரங்களோடும், இரண்டாவது மூன்று நாட்கள் மஹாலெக்ஷ்மி அவதாரங்களோடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி அவதாரத்திலும் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு வகை பூக்கள், பிரசாதம், அலங்காரமென்று முறை வைத்து தினமும் காண்போர் விழிகளுக்கு குளுமையும் ஆசீர்வாதமும் கிடைக்கும் விதமாகவும், எட்டாவது நாளன்று சிறப்பான வளையல் அலங்காரமும் செய்து அலங்கரித்து கொலு பாடல்கள், பதிகங்கள், பஜனைகள் செய்து தீபாராதனை காட்டி, மலர்கள் தூவி நெய்வெத்தியம் படைத்து வருகைதரும் பக்தர்களுக்கும், மங்கையர்களுக்கு அருள்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

நவராத்திரி பூஜைகள் தினமும் இரவு ஏழு மணிக்கு துவங்கி சுமார் பத்து மணி வரை ஆலயத்தில் அமைக்கப்படும் கொலு மண்டபத்தில் பக்தர்களின் காணிக்கை, திரளான பக்தர்களின் வருகையால் சிறப்பான அலங்காரமும் செய்து ஆராதித்து தீப வரிசைகள் காட்டப்பட்டு அலங்கார தரிசனம் செய்யப்பட்டு அம்மா அவர்கள் அனைவருக்கும் குங்குமம், பூ, விபூதி பிரசாதம் வழங்குவதோடு அலங்கார வளையல்களை அடுத்தடுத்த அருள்வாக்கு கிழமைகளில் வந்திருக்கும் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.