சுமங்கலி பூஜை/ திருவிளக்கு பூஜை

Home  >>  திருவிழாக்கள்/சிறப்பு பூஜைகள்  >>  சுமங்கலி பூஜை/ திருவிளக்கு பூஜை

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் கடைசி வெள்ளி கிழமையன்று திரளான பெண்கள் பங்குபெறும் சிறப்பு திருவிளக்கு பூஜை ஆலய வளாகத்தில் மாலை வேளையில் விமர்சையாக கொண்டாடப்படும். அன்னைக்கு வாழை இலையின்மேல் பச்சரிசியை பரப்பி அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட ஐந்துமுக பித்தளை குத்து விளக்கினை நடுவில் வைத்து, அதில் ஆலயத்தின் சார்பில் வழங்கப்படும் திரி மற்றும் எண்ணெய் கொண்டு முழுவதுமாக தயாராக, அம்மா அவர்கள் சிறப்பு பூஜை செய்து கற்பகிரகத்தின் உள்ளே முதல் தீபத்தை அன்னை முன் அம்மாவால் வைத்துள்ள குத்துவிளக்கில் ஏற்றியவுடன் அவரவர் விளக்கினை பெண்கள் ஒன்றாக ஏற்றி வைத்து உரிய திருவிளக்கு மந்திரங்கள், குங்குமம் அர்ச்சனைகள் செய்து தீபாராதனை காட்டி, கோயில் சார்பாக சர்க்கரை பொங்கல் பிரசாதம் வைத்து நிவேதியம் செய்து முடித்து அனைத்து பெண்களும் இருகரம் கூப்பி அன்னையை மனத்தில் நினைத்து அமைதியாக தங்களது வேண்டுதலையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருமாறு மனதால் வேண்டுதல் செய்து முடிக்க கோயில் சார்பாக அனைத்து திருவிளக்கிற்கும் தீபாராதனை காட்டி முடிக்க இனிதே நிறைவடைய பெண்களுக்கு அம்மா அவர்களால் பிரசாதம் மற்றும் அன்பளிப்பு பொருள்கள் வழங்கப்படுகின்றது. இறுதியாக வருகை புரிந்துள்ள அனைவருக்கும் அம்மா அவர்களால் அம்மன் பிரசாதம் வழங்கி அன்னதானமும் நடைபெறும்.