ஆடி திருவிழா

ஆடி திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் மிகவும் விமர்சையாக சீரும் சிறப்போடும்  பக்தர்களின் திரளான வருகையாலும் அன்னையின்அருளாலும்  தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் நடந்தேறியிருக்கிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாலையில் அன்னையின் ஆலயத்திலிருந்து பரிவாரங்களோடு புறப்பட்டு அன்னையின் அருள்வாக்கால் அமைக்கப்பெற்ற ஸ்ரீகண்டிநத்தம் கன்னிமூளையில் அமர்ந்தருள்புரியும் அருள்மிகு செல்வ கணபதி ஆலயம் சென்று அங்கு சக்தி கரகம் உருவாக்கி வணங்கி அருளோடு அம்மா அவர்கள் தலைமையில் ஆலயத்திற்கு நாகாத்தம்மனை அழைத்து வந்தமர்த்தி அன்று இரவு சிறப்பான பூச்சொரிதல் நடத்தி, அன்னைக்கும் பக்தர்களுக்கும் அருள்வாக்கு அம்மா அவர்களின் அருள் கரங்களால் மஞ்சள் காப்பு கட்டுதல் மற்றும் சக்திமாலை அணிவித்தல் அதனைதொடர்ந்து அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடத்தப்படுகிறது. அன்றிலிருந்து அடுத்து வெள்ளிக்கிழமைவரை சக்திகரக அலங்காரம், பூஜை அர்ச்சனை என்று தினமும் சிறப்பு பூஜைகளும் பக்தர்களின் சீர்வகையோடு அன்னையின் புறப்பாடும் நடத்தப்படுகின்றது.

                   இரண்டாவது வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி அளவில் அருள்மிகு. செல்வ கணபதி ஆலய வளாகத்தில் சக்தி மாலை அணிந்த பக்தர்கள் அனைவரும் திரளாக குடும்பத்தார்களுடன் ஒன்றுகூடி அருள்வாக்கு அம்மாவின் அருளாசியோடு பால்காவடி மற்றும் அலகு காவடிகளை அலங்கரித்து ஒன்றாக தயாராக அருள்வாக்கு அம்மாவும் சக்தி ரூபம் பூண்டு கையில் சூலம், தலையில் நாக கிரீடம், காலில் சலங்கை அணிந்து அம்மன் கோலத்தில் வேண்டிட அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் பகலில் ஸ்ரீகண்டிநத்தம் செல்வ கணபதி ஆலயத்தில் அம்மா அவர்கள் உருவில் எழுந்தாருள் செய்து தாளவாத்தியத்திற்கு ஏற்ப அருளாட்டம் ஆடி பால்காவடி, அலகு காவடிகள் பின்தொடர ஊர்வலமாக அன்னையின் ஆலயத்திற்கு வந்து சேர்கிறார்கள். ஊர்வலமாக எடுத்து வந்த செம்பு, பித்தளை, மற்றும் வெள்ளி என்ற மூன்று வகை குடத்திலான பால் கொண்டு அருள்வாக்கு அம்மா அவர்கள் சிறப்பு பாலாபிஷெகம் நடத்தி அன்னை மனம் குளிரச் செய்து அருள்வாக்குபடியான பரிகாரங்களை நிவர்த்தி செய்து பக்தர்கள் பலன்பெற செய்கிறார்கள், ஆடி மாத சிறப்பு பாலாபிஷெகம் நிறைவடைந்தவுடன் அன்னைக்கு கஞ்சி நிவேதியம் படைத்து மஹதீபாராதனை செய்து அதன் பிறகு மதியம் சிறப்பான அன்னதானம் அன்னையினால் தேர்தடுக்கபடும் உபயதார்கள் மூலமாக அருள்மிகு. செல்வ கணபதி ஆலயத்தில் தற்காலிகமாக அமைக்கபடும் அன்னதானமண்டபம்  மனநிறைவோடு வழங்கப்படுகிறது. அன்று இரவு அன்னைக்கு புறப்பாடு நடத்தி முடிந்த பிறகு அருள்மிகு. செல்வ கணபதி ஆலயத்திற்கு வடமேற்கில் மேடை அமைக்கப்பட்டு பிரபலமான கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது, நிகழ்ச்சியின் முடிவில் பலவிதத்தில் உதவிய நன்கொடையாளர்கள் அருள்வாக்கு அம்மா அவர்களாலும், நிர்வாக அறங்காவலர் அவர்களாலும் பாராட்டப்பட்டு வாழ்த்தி நினைவு பரிசு, பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து பூஜைகள் நடத்தி அதன்தொடர்ச்சியாக இரண்டாவது ஞாயிற்றுகிழமை அன்று விடையாத்தி என்ற சக்தி கரகத்தை வழியனுப்பும் நிகழ்வும், அன்னைக்கு மஞ்சள் நீராட்டும் நடத்தி மாலையில் மஞ்சள் காப்புகள் கலைதல் நிகழ்வும், அருள்வாக்கு அம்மா அவர்களால்  நிறைவேற்றபட்டு அம்பாளுக்கு கூல்பிரசாதம் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.

                ஆடி மதத்தில் வரும் அம்மனுக்கு உகந்த தினமான ஆடிப்பூரமன்று சுமங்கலி பெண்கள் கலந்துக்கொண்டு அன்னைக்கு கஞ்சி கலையம் சுமந்து வந்து கஞ்சி வார்க்கும் நிகழ்வும் மிகவும் சிறப்போடு நடத்தப்படுகிறது. ஆடிமாதம் அம்மன் மாதம் என்பதற்கிணங்க அருள்மிகு. மஹாசக்தி நாகாத்தம்மன் ஆலயத்திற்கு அருள்வாக்கு அம்மா அவர்கள் உருவில் எழுந்தாருள்புரிந்து பக்தர்களின் பரிகார நேர்த்திகளை ஏற்று உரிய பலன்களை வழங்கியும், பகலில் எழுந்தருளி பக்தர்களின் ஊர்வலத்தை வழிநடத்தியும் காத்தருள்புரிவதால் இந்த பத்து நாட்களில் வரும் கிழமைகளில் அருள்வாக்கு நிகழ்த்தப்படுவதில்லை.

Tab 2 Title

Tab 2 text goes here.

Tab 3 Title

Tab 3 text goes here.