திருகோவில் தெய்வங்கள்

Home  >>  திருகோவில் தெய்வங்கள்

கோகூர் மாரியம்மன்

அருள்வாக்கு அம்மா அவர்கள் குழந்தையாக இருந்தபோது ஆட்கொண்டு வாக்கு வந்த இடத்தில் உருவாக்கப்பட்டவரே கோகூர் அம்மன் ஆவர். பிற்காலத்தில் மீண்டும் ஸ்ரீகண்டிநத்தம் நாகாத்தம்மனாக மறுப்பிரவேசம் மேற்கொண்டு அம்மா அவர்களை ஆட்கொண்டு அருள்வாக்கு மூலமாக காட்சிதரும் இந்த கால கட்டத்தில் நாகாத்தம்மனிடம் ஸ்ரீகண்டிநத்தத்திற்கு தாமாக விரும்பி வந்துவிடுவதாக கோரிக்கை வைக்க பக்தர்களையே மனம் வந்து காக்கும் கருனைக்கடல் அன்னை மஹாசக்தி நாகாத்தம்மனும் அனுமதியளித்தார்கள்.  அதன்படி கோகூரிலிருந்து அருள்வாக்கு அம்மா அவர்களால் அழைத்துவரப்பட்டு இங்கு கோயிலின் வடமேற்கு மூளையில் மறுநிர்மானம் செய்து பக்தர்கள் வழிப்பட அனுமதித்ததோடு இத்திருக்கோயிலில் பக்தர்கள் ஏற்றிடும் எண்ணிக்கையிலான நெய் தீபங்களை கோகூர் அம்மன் முன்பாக ஏற்றி வைத்து வழிப்பட்டு நிவர்த்திபெறும் பெரும்பேற்றினையும் வழங்கி காத்தருள் புரிந்து வருகிறார்கள்.

எல்லையம்மன்

ஸ்ரீகண்டிநத்தம் அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயில் வளாகத்தில் வடக்கு புறத்தில் தெற்கு முகம் பார்த்தவிதமாக நாகக் குடையுடன் கூடிய மார்பளவு சுதை சிற்பமாக காவல் தெய்வமாம் அன்னை எல்லையம்மன் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள்.  இவரது சன்னதியில் அமர்ந்துதான் அருள்மிகு அருள்வாக்கு அம்மா அவர்கள் ஒவ்வொரு அருள்வாக்கு கிழமையிலும் அருள்வாக்கின் முடிவில் பக்தர்களுக்கு குங்கும பிரசாதமும் ஆசீர்வாதமும் வழங்கி வருகிறார்கள்.

உச்சவர் அம்மன்

அருள்மிகு. அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் கடந்த 21.01.2011-ம் ஆண்டு ஸ்ரீகண்டிநத்தம் புண்ணிய பூமியில் அருள்வாக்கு அம்மா உருவில் தோன்றி அன்று முதல் அருள்காட்சி தந்து அருகாமையில் தெற்குபுறமுள்ள கோயில் கடம்பனூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு. காளியம்மன் கோயில் வளாகத்திலிருந்தே அருள்வாக்கு வழங்கி காத்தருள் புரிந்து வந்துள்ளார்கள்.

அருள் வாக்கு கிழமையில் ஒரு நாள் அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன்தான் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக காளிகாம்பாள் என்ற இறைநாமத்துடன் சுயம்புவாக வேம்பாக தோன்றி வளர்ந்து காட்சித்தந்து ஸ்ரீகண்டிநத்தத்தில் அருளாட்சி புரிந்து பக்தர்களை காத்தருள் புரிந்துவந்தாகவும் அன்னை அப்பொழுது வீற்றிருந்த பூர்வீக இடத்தின் விபரத்தினையும் அங்கு அருள்வாக்கு தம்பதியர் குடியிருக்கும்  குடிசை வீடு மீண்டும் தனது இருப்பிடமாக மாறவேண்டும் என்றும் உத்திரவிட்டார்கள்.  அத்துடன் அம்மா அவர்கள் மூன்று நாக திருமேனிகளின் உருவில் தற்பொழுது இருக்கும் இருப்பையும் அதன் ஆயுள்கால முடிவையும் கூறி அவைகளை எடுத்துவந்து தனது பூர்வீக இடத்தில் அடக்கம் செய்து வழிப்பட்டால் தான் அங்கிருந்து இனிவரும் காலங்களின் அருள்வாக்கு புரிவேன் என்றும் வாக்களித்தார்கள்.

இவ்வாறாக அன்னையே தனது அருள்வாக்கால், அவரது முந்தைய கால வரலாற்றினையும், அதன் விளக்கத்தையும், பூர்வீக அமைவிடத்தையும் கூறியதோடு அங்கேயே தான் மீண்டும் உருவெடுத்து மஹாசக்தி நாகாத்தம்மனாக பக்தர்களுக்கு வாரத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவில் 10.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை அருள்வாக்கு வழங்குவதாகவும், பூர்வீக இடத்தில் புற்றாக வளர்வதாகவும் வாக்களித்து அவ்வாறாகவே சுயம்புவாக தோன்றியவர்தான் நம் அன்னை மஹாசத்தி நாகாத்தம்மன். எந்தவித விபரமும், பூர்விக தன்மையையும் இப்படியாக அறியாத பிள்ளைகளாக இருந்த நமக்கு அன்னையாக இருந்து அவரது அனைத்து பூர்வீக விபரத்தினையும், விளக்கத்தினையும் ஒவ்வொரு அருள்வாக்கு கிழமைகளிலும் ஒவ்வொன்றாக நமக்கு அருள்வாக்காக வழங்கி நம்மை விபரங்கள் அறியச்செய்தார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகள், பூஜை முறைகள், வழிபாடுகள், திருவிழாக்கள், ஹோமங்கள், பரிகாரங்கள, அன்னதானங்கள், கட்டுமானங்கள் ஏன் இந்த ஸ்தல வரலாற்று பதிப்புக்கூட அவரது அருள்வாக்கின்படியும் அவரது ஆசீர்வாதத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட திரு. பெ. கோவிந்தராஜன், பவித்திரமாணிக்கம், திருவாருர் அவர்களால் எழுதி வடிவமைக்கப்பட்டு வருகிறது.  எல்லாம் அன்னையின் அருளாலும் அவர்தம்அருள் வாக்கால் மட்டுமே வருகிறது.

அருள்மிகு. அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்களால் வழங்கப்பட்ட அருள்வாக்கின்படியே அனைத்தும் ஒவ்வொன்றாக அதனதன் காலகட்டங்களில் நடந்தேறி வருகிறது.   அப்படியாகத்தான் அன்னையின் வாக்குப்படி மூன்று நாக திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டு எடுத்துவந்து பூர்வீக இடமாக சுட்டிகாட்டப்பட்ட இடத்தில் அடக்கம் செய்து பால் ஊற்றி பூஜீத்துவர அங்கேயே வளர்ந்தார் புற்றாக சுயம்புவாக வளர்ந்த புற்றின் அருகாமையில் இருந்தப்படியே அருள்வாக்கும் தொடர்ந்தது.

புற்றுக்கு கோயில் அமைத்து குடிசைப்போட்டு பூஜைகளை தொடர அங்கு புற்றடியில் நாக உருவில் வந்திருந்து படுத்திருந்து பக்தர்களுக்கு அம்மா மூலமாக அருள்வாக்கோடு அற்புத காட்சியும் வழங்கி வந்தார்கள்.  இரண்டாம் நிலையாக சுயம்புவாக புற்று உருவான இடத்தில் மூலவர் அம்மன் உருவ கற்சிலை நிர்மாணிக்கப்பட்டு கருவறை கோயில்  உருவாக்கப்பட்டது. கருவறை கோயிலின் முன்பு நீட்டிப்பு செய்து மாடங்கள் அமைக்கப்பட்டது.

மூன்றாம் கட்டமாக திருக்கோயில் வளாகம் உருவாக்கப்பட்டு பரிவார தெய்வங்கள், எல்லையம்மன், கோகூர் அம்மன், புற்றடி அம்மன் திருமேனிகளும், ஓவிய வடிவ தெய்வீக உருவங்களும் வரையப்பட்டு கோயில் விமானம் மூன்று அடுக்காக ஒன்றன்மேல் ஒன்றாக கட்டுமானம் செய்விக்கப்பட்டுதான் தற்போதைய திருக்கோயில் அமைப்பு உருவாக்கப்பட்டு, அலுவலக அறையும், வடகிழக்கில் கட்டி இரண்டு முறை மஹா கும்பாபிஷேகங்களும் நடத்தப்பட்டு அருள்திரு P.Vஇராமமூர்த்தி சுவாமி அவர்கள் தலைமையில் திருக்கோயில் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறாக உருவாக்கப்பட்ட திருக்கோவில் நிர்மானத்தின் ஒரு பகுதியாக கடந்த 2010-ஆம் ஆண்டு உச்சவர் அம்மன் விக்கிரகம் ஐம்பொன்னால் சுமார் ஒன்றரையடி உயரத்தில் உருவாக்கப்பட்டு கருவறையில் அன்னையின் இடதுபுற பீடத்தில் வடமேற்கு மூலையில் கிழக்கு முகமாக எழுந்தருளச்செய்து நடைபெறும் அனைத்து பூஜைகளின் போதும் பூஜிக்கப்பட்டு வருகிறது. உச்சவர் அம்மன் இரண்டு திருகரங்களோடு சிரித்த முகத்துடன் வலது காலினை தொங்கவிட்டும் இடது காலினை மடித்து வைத்து அமர்ந்த நிலையில் அருட்காட்சி புரிகிறார்கள். கோயிலில் நடைபெறும் அனைத்துவிதமான ஹோமங்களும், யாகங்களும், பூஜைகள், அபிஷேகம், நவராத்திரி கொலு, திருவிழா மற்றும் அனைத்து புறப்பாடுகளும் உச்சவர் அம்மன் அன்னைவாகனத்தில் எழுந்தருளும் திருகாட்சியோடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அருள்வாக்கு அம்மா அவர்கள்

அருள்மிகு அருள்வாக்கு அம்மா அவர்களோ தனது உடல் பொருள் மூச்சு சிந்தனை செயல் வாழ்க்கை என அனைத்தையுமே அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்களை பூஜிப்பதற்கும் அவர்தம் பக்தர்களை அரவணைப்பதற்குமே முழுமையாக அர்பணித்து எப்பொழுதும் இறை நினைப்புடன் தனது குடும்பத்தார்களுக்குக்கூட எவ்விதமான உரிமையை வழங்காமல் பக்தர்களையும், திருப்பணியாளர்களையும் அன்புடனும், பரிவுடனும் தாயுள்ளத்தோடு அரவணைத்து ஆசீர்வதித்து வழிநடத்தி வருகிறார்கள். எனவேதான், அன்னைக்கான பணிகள் அனைத்தையும் அது பூஜையாக இருந்தாலும், அலங்காரமாக இருந்தாலும் புறப்பாடாக இருந்தாலும் எப்பொழுதும் அன்னையின் அருகாமையிலே தொடர்ந்திருந்து அனைவரையும் கருணையோடு வழிநடத்தி பூஜிப்பதில் ஏற்படும் பேரானந்ததிலேயே முழுநேர இறைப்பணியினை செய்துவருகிறார்கள்.  இப்படியாக உச்சவர் அம்மனைப்பற்றி எழுதிடும் வேளையில் அருள்மிகு அருள்வாக்கு அம்மா அவர்களின் இறைப்பணிப்பற்றி எழுதியே ஆகவேண்டும். நிறைவாக அன்னையே அம்மா, நமது அம்மாவே அன்னை, ஆராதிப்போம் அருள்பெறுவோம்.

சுபம், சுபமங்களம்