தலைமை மன்றம்

Home  >>  தலைமை மன்றம்

தலைமை மன்றமாக முதலாவதாக ஸ்ரீகண்டிநத்தம் அருள்மிகு. செல்வகணபதி ஆலய வளாகத்தில் துவங்கப்பட்டது.

அருள்மிகு.அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் அருளாலும், அருள்வாக்கு அம்மா அவர்களின் ஆசி மற்றும் அனுமதியாலும் அன்னையின் அருளால் பத்திகொண்ட பக்தர்கள் ஒன்றிணைந்து அருள்மிகு மஹாசக்தி நாகாத்தம்மன் சேவை மன்றத்தினை கடந்த ஸ்ரீவிஜய வருடம் மாசி மாதம் 22-ஆம் நாள் வியாழக்கிழமை 06.03.2014 அன்று ஸ்ரீகண்டிநத்தம் அருள்மிகு. செல்வகணபதி ஆலய வாளாகத்தில் அருள்வாக்கு அம்மா அவர்களின் திருக்கரங்களால் அன்னையின் திருக்கொடி ஏற்றி வைத்து. திருவுருவப்படங்களையும், பெயர் பலகையையும் திறந்து வைத்து பூஜைகள் செய்து துவக்கி வைக்கப்பட்டது.

அருள்மிகு அன்னையின் கருவறை மற்றும் அருள்வாக்கு அம்மா அவர்களின் திருவுருவப்படங்களை நிர்மானித்து உரிய முறையில் பூஜைகள் செய்து, நிவேத்தியம் படைத்து, தீபாராதனைகள் காட்டி அம்மா அவர்கள் துவங்கி வைத்து வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கி விபூதி குங்கும பிரசாதம் வழங்கிட அதனை  தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

சேவை மன்றம் துவங்கப்பட்டதனை தொடர்ந்து அருள்மிகு. செல்வகணபதி ஆலய வளாகத்தில் துவங்கப்பட்ட மன்றத்தினை முதன்மை மற்றும் தலைமை மன்றமாகவும் ஏற்றுக்கொண்டு இதனை நிர்வாகிக்க தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் செயல் திருப்பணி உறுப்பினர்களை அம்மா அவர்களும் ஆலய நிர்வாகி அருள்திரு. P.V.இராமமூர்த்தி சுவாமிகள் அவர்களும் வந்திருந்த பக்தர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து ஒருமனதாக நியமித்தார்கள்.

சேவை மன்றமானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 04.30 முதல் 06.00 மணி அளவில் அனைவரும் திரளாக வந்திருந்து அன்னையின் திருவுருவ படங்களுக்கு உரிய அலங்காரங்கள் செய்து பக்தர்களின் ஒருமித்த வழிப்பாட்டினை வார வழிப்பாடு என்ற முறையில் செய்து நிவேத்தியம் படைத்து தீப அலங்காரம் செய்து வழிபடுவதென்றும், அதன் முடிவில் அன்றைய தினத்தில் அருள்வாக்குபெற திரளாக வருகை தரும் பக்தர்களையும் கலந்துக்கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த தலைமை மன்றத்தினை தொடர்ந்து பக்தர்களின் வேண்டுகோள்களை ஏற்று அன்னையின் சேவைமன்றம் கிளைகளை அந்தந்த ஊரில் இருக்கின்ற பக்தர்களின் கூட்டுமுயற்சியல் உரிய இடம் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கையினை தலைமை மன்ற நிருவாகிகளிடம் விளக்கி, நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்து அவர்களின் நேரடி ஆய்வின் விபரத்தின் அடிப்படையில் அம்மா அவர்களும் நிர்வாகி அவர்களும் முடிவெடுத்து உரிய சுப தினத்தில் கிளை சேவை மன்றங்களுக்கு வருகை தந்து, துவக்கி வைத்து ஆசீர்வதிப்பதாவும் தெரவித்துள்ளார்கள். விரைவில் சில இடங்களில் கிளை சேவை மன்றங்களை துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக அருள்மிகு. அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் சேவை தலைமை மன்றமானது ஸ்ரீகண்டிநத்தம் அருள்மிகு. செல்வகணபதி ஆலயத்தில் துவங்கப்பட்டது முதல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை வேலையில் சிறப்பாக கூட்டு வழிபாடுகள் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சேவை மன்றமானது பொதுமக்கள், இயலாதவர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தனது சேவையினை துவங்க இருக்கிறது என்பதனையும், மேற்கண்ட சேவையில் முழுமனதுடன் பங்கெடுத்துக்கொள்ள விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகி அவர்களையோ, மன்ற பொறுப்பளார்களையோ சந்தித்து விபரம் தெரிவித்தால் அம்மா அவர்களின் ஆலோசனைப்படியும், உத்தரவுகள்படியும் சேவை செய்திட சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதனையும் இதன்மூலமாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.